காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான இன்று இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க பல லட்சம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் நள்ளிரவு 12.30 மணிக்கு தரிசனம் செய்தார்.

Advertisment

KANCHEEPURAM ATHI VARADAR DARSHAN ACTOR RAJINI KANTH TODAY EARLY MORNING

ஆகஸ்ட் 17- ஆம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடியவிருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் மேற்கொண்டார். அத்திவரதர் தரிசனம் நிறைவுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள், அத்திவரதரை தரிசிக்க வரிசையில் நின்றுகாத்துக்கொண்டிருக்கின்றனர்.