Skip to main content

நம்பிக்கை வாக்கெடுப்பை நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போட முடியாது: தினகரன் பேட்டி

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
நம்பிக்கை வாக்கெடுப்பை நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போட முடியாது: தினகரன் பேட்டி

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நீண்ட நாட்களுக்கு இந்த அரசு தள்ளிப் போட முடியாது என அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

தற்போது நடைபெறும் துரோக ஆட்சியில் மக்களுக்கான சாதகமான முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுமா? என்று எல்லோரும் எதிர்பார்ப்பது போல் நானும் எதிர்பார்க்கிறேன். இப்போது கூட்டப்படும் அமைச்சரவை கூட்டத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களும் என்னைப் பற்றி பல்வேறு யூகத்துடன் பேசுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். தமிழ்நாட்டில் சிலர் கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி நான் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

புரட்சித் தலைவி அம்மா வழி நடத்திய கட்சியில் தொண்டர்களாக இருப்பவர்கள் கடைசி வரை மனசாட்சியுடன் இருப்பார்கள். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இந்த அரசு நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போட முடியாது. கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு எப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது எது உண்மையான ஆட்சி என்று மக்களுக்கு தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்