புதிய பாலத்திற்கு ஜெ. பெயர் வைத்த எடப்பாடி!

ஈரோடு மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் 30 கோடி மதிப்பு கொண்ட புதிய பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4மணிக்கு பள்ளிப்பாளையத்தில் நடந்த நிகழ்வில் திறந்து வைத்தார். புதிய பாலத்திற்கு புரட்சித்தலைவி அம்மா பாலம் என பெயர் சூட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, இப்பாலம் 4 ஆண்டுகளாக நடைபெற்றது. முன்பே இப்பாலம் திறப்பு விழா நடைப்பெற்று இருந்தால் அண்ணன் எடப்பாடி திறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் கையால் திறந்து வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்நிகழ்ச்சிக்காக பள்ளிப்பாளையம் மற்றும் ஈரோடு பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டது. இதனால் விடுமுறை தினமான இன்று மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
- ஜீவா தங்கவேல்