Skip to main content

தற்கொலை செய்துகொள்வேன் - அதிமுக எம்.பி.பகீர்! நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

Published on 28/03/2018 | Edited on 28/03/2018
parli


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூட தயார் என நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை புறக்கணித்து அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தும் காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை அமைக்கப்படவில்லை. மேலும் தாமதமாகும் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

காவிரி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுகுறித்து விவதாமோ, பேச்சோ இதுவரை நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில், மிகவும் முக்கியமான விஷயத்தை பேச வேண்டும் என்று அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டவுடன், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இது உச்சநீதிமன்ற தீர்ப்பு. இதை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

அப்படி செய்யாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அரசியல் சாசனம் எதற்கு? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதிமுக எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்யவேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை விடுக்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூட தயாராக உள்ளோம் என நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்