ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தாட்கோ மேலாண் இயக்குநராக என்.சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார். சேகோசர்வ் மேலாண் இயக்குநராக கஜலட்சுமி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அருங்காட்சியக இயக்குநராக கவிதா ராமு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவணக்காப்பக இயக்குநராக அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித்துறை இணை ஆணையராக சிவராசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார முறை திட்ட இயக்குராக உமா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பட்டுப்புழு வளர்ச்சித்துறை இயக்குநராக வெங்கட பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் கூடுதல் இயக்குநராக சீதாலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்