தேமுதிக பொது செயலாளரானார் விஜயகாந்த்

தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். துணை செயலாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, நேற்று புதிய நிர்வாகிகள் பட்டியலை தேமுதிக தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அவைத் தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ், பொருளாளராக இளங்கோவன், துணை செயலாளர்களாக எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.ஆர்.இளங்கோவன், பேராசிரியர் சந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.