
சென்னையில் கழிவுநீர் உறைக் கிணற்றைச் சுத்தம் செய்ய முயன்ற இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடியில் உள்ள கழிவுநீர் உறைக் கிணற்றைச் சுத்தம் பணியில் சரவணன், காளிதாஸ் என்ற இருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது உள்ளே சென்ற காளிதாஸ் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற உள்ளே இறங்கிய சரவணனும் மயக்கமடைந்தார். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டனர். காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்த துரைப்பாக்கம் காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். கழிவுநீர் உறைக் கிணற்றைச் சுத்தம் செய்ய முயன்ற இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சென்னை பெருங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.