Skip to main content

காய்ச்சலில் 9 வயது சிறுமி உயிரிழப்பு: மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
காய்ச்சலில் 9 வயது சிறுமி உயிரிழப்பு: மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷகிலா(வயது-34). இவரது மகள் பல்கிஷ் பானு(வயது-9). சேந்தமங்கலம் சாலையில் உள்ள உருது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பல்கிஷ் பானு கடந்த 2-ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த, 5-ஆம் தேதி காலை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நேற்று மதியம், 3:00 மணிக்கு, சிறுமி பல்கிஷ் பானு மூளைச்சாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் இருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு சரிவர சிகிச்சை அளிக்காததால் தான், மூளை பாதிப்பு ஏற்பட்டதாக கூறி, பல்கிஷ் பானுவின் உறவினர்கள் நேற்று மாலை 3:20 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து செவ்வாய்பேட்டை போலீசார் பல்கிஷ் பானுவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மருத்துவமனையில் முறையான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்று முறையிட்டனர். குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு மருதுவமணி மருத்துவர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்