Skip to main content

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்!

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்!



இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 119 நபர்களை பற்றி 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட உட்கோட்ட காவல்நிலைய வாரியாக காணாமல் போனவர்களை பற்றிய சிறப்பு முகாம் நடத்துவதற்கு இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இன்று 27.09.17 கீழக்கரையில்,கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி தலைமையில் தனியார் மஹாலில் இன்று காணாமல் போனவர்களின் உறவினர்களை அழைத்து அடையாளம் கண்டறிவது சம்பந்தமாக சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் திலகவதி, ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா கீழக்கரை எஸ்.ஐகள் மாடசாமி, வசந்தகுமார், பயிற்சி எஸ்.ஐ பாண்டிலெட்சுமி மற்றும் திருப்புல்லாணி எஸ்.ஐ ராமசந்திரன், சாயல்குடி, உ.மங்கை, ஏர்வாடி ஆகிய காவல்நிலைய ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களில் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

- பாலாஜி

சார்ந்த செய்திகள்