Skip to main content

கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை: விஷால்

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை: விஷால்

கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்ற நிலைப்பாடு தொடரும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரை நடிகர் விஷால், கருணாஸ், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்றும் கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக ஓரிரு நாட்களில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்