Skip to main content

மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை கொத்தாடி பகுதியில் துரை என்பவரது தோட்டம் உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள இவரது தோட்டத்துக்கு நேற்று முன்தினம் இரவு குட்டியுடன் 2 காட்டு யானைகள் வந்து, பாக்கு மரங்களை உடைத்து சாப்பிட்டன. அப்போது மரம் சாய்ந்து மின்கம்பியில் விழுந்தது. 

இதில் மின்கம்பியை தொட்டவுடன் மின்சாரம் பாய்ந்து 2 யானைகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன. இதில், இறந்த ஆண் யானைக்கு 12 வயதும், பெண் யானைக்கு 18 வயதும் இருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்