Skip to main content

சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு தமிழக அரசே காரணம்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு தமிழக அரசே காரணம்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் பரோல் கோரி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பத்திருந்தார்.

அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சிறைத்துறை சில நிபந்தனைகளுடன் கூடிய 5 நாள் பரோல் வழங்கியது. இதனையடுத்து, சிறை வளாகத்தில் இருந்து நேற்று மாலை கிளம்பிய அவர் கார் மூலமாகவே சென்னை வந்தடைந்தார். அவருடன் டி.டி.வி தினகரன் உள்ளிட்டவர்களும் வந்தனர்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளவரசியின் மகன் வீட்டுக்கு வந்தடைந்த சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் திரளாக கூடி வரவேற்றனர். வீட்டின் வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் நான்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு தமிழக அரசே காரணம் என குற்றம் சாட்டினார்.

கர்நாடக சிறைத்துறை 3 நிபந்தனைகள் மட்டுமே விதித்தது எனவும், சசிகலா வெளிவந்தால் அரசியல் மாற்றம் ஏற்பட்டு விடும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்க கூடாது என நிபந்தனைகள் விதித்துள்ளனர். தமிழக காவல்துறையின் நடவடிக்கையால் தான் 4 நாட்கள் தாமதமாக பரோல் கிடைத்துள்ளது. நாங்கள் யாரும் சசிகலாவை பார்க்க முடியவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்