என்.எல்.சி இந்தியா நிறுவனம் 2325 கோடி வருவாய் ஈட்டியது - சரட்குமார் ஆச்சார்யா தகவல்

கடலூர் 2017-18 நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் 2325 கோடி மொத்த வருவாய் ஈட்டி உள்ளதாக என்.எல்.சி இந்தியா தலைவர் சரட்குமார் ஆச்சார்யா தகவல். என்.எல்.சி இந்தியா தலைவர் சரட்குமார் ஆச்சார்யா நெய்வேலியில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர், “ 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையத்தில் 2018 - முதல் காலாண்டில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும், 2019 ஆம் ஆண்டுக்குள் பசுமை மின்சக்தி திட்டத்தின் கீழ் 4251 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டிற்குள் என்.எல்.சி யின் மொத்த மின் உற்பத்தி 21,000 மெகாவாட்டாக உயரும் என்றும் கூறினார்.
மேலும் மத்திய அரசு அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தை என்.எல்.சியின் சமூக பொறுப்புணர்வு துறை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. மேலும் 45 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பசுமை இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறது. என்றும் ஆச்சார்யா கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர்கள் ராகேஷ்குமார், சுபீர்தாஸ், தங்கப்பாண்டியன், விக்கிரமன், முத்து ஆகியோர் உடனிருந்தனர்.
-சுந்தரபாண்டியன்