Published on 04/11/2023 | Edited on 04/11/2023

பருவமழை காரணமாக ஆங்காங்கே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினுக்கும் தற்போது வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. நேற்றிலிருந்து இருமல் மற்றும் காய்ச்சலால் முதல்வர் ஸ்டாலின் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.