Skip to main content

நிபா வைரஸுக்கு புதுச்சேரியில் 2 சிறப்பு வார்டுகள்! கண்காணிப்பு தீவிரம்!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

நிபா வைரஸுக்கு புதுச்சேரியில் இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாஹே பிராந்தியம் உட்பட புதுச்சேரி முழுக்க சுகாதாரத்துறை கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ளது.

 

 2 special wards in Puducherry Tracking intensity for nipah virus!

 

கேரளத்தில் நிபா வைரஸ் கடந்தாண்டு வேகமாக பரவியது. இச்சூழலில் நடப்பாண்டும் மீண்டும் இவ்வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளத்தையொட்டி அமைந்துள்ள மாஹே பிராந்தியமுமுள்ளது. அங்கிருந்து பலர் புதுச்சேரிக்கு வருவதால் இங்கும் நிபா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாஹே எல்லையில் அங்கிருந்து வருவோருக்கு தீவிர பரிசோதனை செய்ய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

 



புதுச்சேரியில் கோரிமேடு அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் இதற்கென இரு தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குபோதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேர பணியில் இருப்பார்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் யாருக்காவது நிபா வைரஸ் தாக்கியதற்கான அறிகுறி தென்பட்டால் உடன் சுகாதாரத்துறைக்கு தகவல் தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.