Skip to main content

நடைபயிற்சியின் போது ராணுவ அதிகாரி மாரடைப்பால் மரணம்

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
நடைபயிற்சியின் போது ராணுவ அதிகாரி மாரடைப்பால் மரணம்

மெரினா கடற்கரையில் நேற்று அதிகாலை 6.30 மணி அளவில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் மார்பு பகுதியில் கையை வைத்தப்படி கீழே சுருண்டு விழுந்தார். இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தனர். ஆனால் அவர் எழுந்திருக்க வில்லை. உடனே இதுகுறித்து பொதுமக்கள் அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்படி விரைந்து வந்த போலீசார் மயங்கி விழுந்த நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஆய்வு செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பல்லவன் இல்லம் அருகே உள்ள தென் பிராந்திய ராணுவ மையத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வரும் விஸ்வாஸ் குமார் என்று. இவர் ராணுவத்தில் கர்னல் பதவி வகித்து வந்தது தெரியவந்தது. 

சார்ந்த செய்திகள்