Skip to main content

நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார்

Published on 17/10/2017 | Edited on 17/10/2017
நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் தயாநிதி (வயது 24). இவர் புது வண்ணாரப் பேட்டை போலீசில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது நேற்று காலை ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி பல இடங்களில் அலைந்தேன். அப்போது நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அப்போது அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக உறுதியளித்தார். அதை நம்பி அவரிடம், நான் ரூ.4 லட்சத்து 16 ஆயிரம் கொடுத்தேன். ஆனால், அவர் இதுவரை எனக்கு சினிமா வாய்ப்பு பெற்று தரவில்லை.

மேலும் அவரை நேரில் பார்க்க சென்றால் பார்க்க முடிவதில்லை. என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர் மோசடி செய்து விட்டார். எனவே இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து, பவர் ஸ்டார் சீனிவாசனிடம் இருந்து எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்