Skip to main content

வலைதளங்களில் தன் பெயரை பயன்படுத்த நடிகர் அஜித் எதிர்ப்பு..!

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
வலைதளங்களில் தன் பெயரை பயன்படுத்த நடிகர் அஜித் எதிர்ப்பு..!

எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ, சமூக வலைதளங்களையோ அஜித் அங்கீகரிக்கவில்லை என நடிகர் அஜித் சார்பாக அவரது சட்ட ஆலோசகர் பரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர்  பரத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமூக, அரசியல் மற்றும் தன் சார்பாக தனிப்பட்ட கருத்தை வெளியிட அஜித் யாரையும் அனுமதிக்கவில்லை. தனக்கு அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்று ஒன்றும் இல்லை என அஜித் தெளிவுபடுத்தியுள்ளார். எந்த ஒரு வணிக சின்னம், பொருள், நிறுவனம், அமைப்புக்கும் அஜித் விளம்பரதூதர் இல்லை.

சமூகவலைதளங்களில் அஜித் பெயரில் வரும் விமர்சனங்கள் அவருக்கு மன உளைச்சலை அளிக்கிறது. அஜித் பெயரில் வந்த விமர்சனத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் அவர் மனவருத்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறு நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்