ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி!
மதுரை யாகப்பா நகரில் குறிஞ்சி குமரன் ரியல் எஸ்டேட், தனியார் பள்ளி, சிட்பண்ட் ஆகிய தொழில் நடத்தி வந்தவர், இதில் தொழில் நஷ்டம் மற்றும் கடன் தொல்லை காரணமாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜெகஜோதி ,ஜெய சக்தி , வேல்முருகன், குறிஞ்சி குமரன், தாரணி 5 நபர்கள் மரணம் அடைந்தனர்.
இதில் தேவி, மேனிகா, தங்க செல்வி 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலையில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தும் நேரமாகியும் வராத காரணத்தால் 8 நபர்களையும் மினி பஸ்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் சரியான நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தால் 5 நபர்களை காப்பாற்றி இருக்கலாம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர் .
- முகில்