Skip to main content

7-வது ஊதியக்குழு பரிந்துரை ஆய்வறிக்கை தாக்கல்!

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
7-வது ஊதியக்குழு பரிந்துரை ஆய்வறிக்கை தாக்கல்!

மத்திய அரசின் 7-வது உதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்துவதற்காகவும், ஊதிய விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை களையவும் தமிழக அரசு சார்பில் அலுவலர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அரசிடம் அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மத்திய அரசு பரிந்துரைகளை அமல்படுத்துவதில் உள்ள முரண்பாடுகளை களைவதற்கான இறுதி அறிக்கை தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலர்குழு முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்தனர். அப்போது ஏற்கனவே ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையை குழுவின் தலைவர் முதலமைச்சரிடம் வழங்கினார். இந்த அறிக்கையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தினால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 2 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்