“Dravidian Language Family Lesson Link” - I. Leonie

Advertisment

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நாகை மண்டல அலுவலகத்தில் பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அனுப்புவதற்கு வைக்கப்பட்டுள்ள புதிய புத்தகங்களை அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், “தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கண்ணியமாக மேடையில் பேசவேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். பாஜக மகளிர் அணி நிர்வாகி குஷ்புவை தரக்குறைவாக பேசியது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்கவே அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கியுள்ளோம். பெண்களை உயர்வுபடுத்துவதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் என்பதால் இனிமேல் யாரும் இதுபோல பேசமாட்டார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் திறந்து வைத்தது குறித்த பாடம் நீக்கப்பட்டது. ஆகையால் இந்த ஆண்டு ‘திராவிட மொழி குடும்பம்’ என்ற பாடத்தை 9 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளோம். அடுத்த ஆண்டு செம்மொழி நாயகன் கலைஞர், தமிழகத்தின் சிற்பி கலைஞர் என்ற புதிய பாடத்திட்டம் உருவாக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.