தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடி நிறுத்தம்
தீபாவளியை முன்னிட்டு புதுகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 நாட்களுக்கு தங்களது மீன்பிடித் தொழிலை நிறுத்துவதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தீபாவளியையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மீன்பிடித் தளம் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.
இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. வரும் 20 -ஆம் தேதி மீண்டும் கடலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.