விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடு பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்தார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "விநாயகர் சதுர்த்திக்காக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். சென்னையில் ரவுடித்தனத்துக்கு அனுமதியில்லை; கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"இவ்வாறு காவல் ஆணையர் கூறினார்.