கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கரோனா பாதிப்பு 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 1500- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779- லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும்கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அரசுக்குச் சவாலாக அமைந்துள்ளது.

Advertisment

 tamilnadu lockdown - TNPolice

இதற்கிடையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வர பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் 30% மக்கள் அநாவசியமாக வெளியே வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கையைத் தமிழக அரசு கடுமை படுத்தியதையடுத்து, ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியதாக 3,24,269 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஊரடங்கை மீறியதாக 2,76,183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3.27 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.