Skip to main content

துப்பாக்கி தோட்டா பாய்ந்து ராணுவ வீரர் மரணம்

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
துப்பாக்கி தோட்டா பாய்ந்து ராணுவ வீரர் மரணம்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஜிதேந்தர் அகோஜா(25). காஷ்மீரில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஜம்முவின் புறநகர் பகுதியான நக்ரோடா ராணுவ முகாமில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் அருகே ஏகே ரக துப்பாக்கி கிடந்தது. இதனால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து, அவரை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று டாக்டர்கள் சோதனையிட்டபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜிதேந்தர் சுட்டுக்கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்