Skip to main content

சோதனையில் இருக்கும் கரோனா தடுப்பூசி: முன்கூட்டியே ஆர்டர் கொடுக்கும் மத்திய அரசு!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

biological e vaccine

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டிற்குள்ளேயே தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சமீபத்தில் மத்திய அரசு,  தடுப்பூசி தயாரிக்க சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தது.

 

இந்தநிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிகல் - இ நிறுவனத்திடம் இருந்து, 30 கோடி கரோனா தடுப்பூசிகளைப் பெற முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பயோலாஜிகல் - இ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தத் தடுப்பூசிகளுக்காக 1,500 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

 

மேலும் பயோலாஜிகல்-இ நிறுவனத்தின் தடுப்பூசி, முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கையான முடிவுகளைக் காட்டியுள்ளதாகவும், தற்போது மூன்றாவது கட்ட பரிசோதனையில் இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

பயோலாஜிகல் - இ நிறுவனம் தற்போது தயாரித்துவரும் தடுப்பூசி, கோவாக்சினுக்குப் பிறகு முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி என்பது குறிபிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்