புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, காரைக்கால் பிராந்தியத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கான தீபாவளி கூப்பன் வழங்கல் உள்ளிட்ட தனது துறைகள் தொடர்பான பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று காரைக்கால் சென்றார். அங்கு காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் சோர்வடைந்த அமைச்சர் கந்தசாமி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். மேலும் அவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான ரத்த மாதிரி உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அமைச்சருக்கு வந்தது சாதாரண காய்ச்சல்தான் என தெரியவந்ததையடுத்து நேற்று மாலை அமைச்சர் கந்தசாமி புதுச்சேரி திரும்பினார்.