கேரள பாஜக அலுவலகத்தில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்!
கேரள பாஜக அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் கண்ணூர் பகுதியில் உள்ளது பாஜக அலுவலகம். இந்த அலுவலக சுவர் உள்ள பகுதியில் இருந்து இரண்டு வாள் மற்றும் ஐந்து இரும்புக்கம்பிகள் துருப்பிடித்த நிலையில் கிடைத்துள்ளன. முதலில் துப்புரவுப் பணிக்காக வந்தவர்கள் இந்த ஆயுதங்களை மீட்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக மாவட்ட செயலாளர் சத்யபிரகாஷ், இது கட்சியின் பெயரைக் கெடுப்பதற்காக யாரோ செய்த சதி. மாவட்ட பாஜக அலுவலகத்தில் இதுமாதிரியான பயங்கர ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பாஜக சார்பில் ஜனரக்ஷா யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினரின் மரணங்களை முன்னிறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள் மீட்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.