Skip to main content

டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதல்வர் நாராயணசாமி

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: 
முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுவை மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று பா.ஜ.க.வினர் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது புதுச்சேரியில் டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்