சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான விவோ, உத்தரபிரதேச மாநிலத்தில் 169 ஏக்கரில் இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இங்கு ஏற்கெனவே 50 ஏக்கரில் அந்நிறுவனத்தின் ஆலை உள்ளது,அதன் அருகே இரண்டாவது உற்பத்தி ஆலையை தொடங்க விவோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vivo-in.jpg)
புதிய ஆலைக்காக ரூ 4,000 கோடியை விவோ நிறுவனம் உத்தரபிரதேச மாநிலத்தில் முதலீடு செய்ய உள்ளது. இதற்கு முன்பாக 2017-ல் சாம்சங் நிறுவனம் ரூ 4,915 கோடியை முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது. அதன்படி விவோ நிறுவனத்தின் இந்த 4,000 கோடி ரூபாய் முதலீடு என்பது உத்தரபிரதேச மாநிலத்தில் ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களின் இரண்டாவது பெரிய முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)