சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்: 6 பேர் பலி!
கர்நாடகாவில் இருவேறு இடங்களில் வீடுகள் இடிந்து தரைமட்டமானதில் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு எஜிபுரா பகுதியில், காலை 7 மணியளவில் வீடு ஒன்றில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், அடுத்தடுத்து 4 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.
வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டதை அடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள், மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் மற்றும் மீட்புப்படையினரும் இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கத் தொடங்கினர்.
இதில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுவதால், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.