
இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால்பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், பிரதமர் மோடி நேற்று (19.04.2021) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். நேற்று காலை கரோனாநிலவரம் குறித்து அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் ஆலோசனை நடத்திய அவர், மாலையில் இந்தியாவின் சிறந்த மருத்துவர்களோடுஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களுடன்பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தநிலையில், இன்று கரோனாநிலவரம் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்பிறகு பிரதமர் மோடி, மாலை 6 மணியளவில் தடுப்பூசி தயாரிப்பாளர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)