உபி மருத்துவமனையில் ஒரேநாளில் 16 குழந்தைகள் உயிரிழப்பு!
உத்தரப்பிரதேசம் பிஆர்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 16 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் குறைபாடு காரணமாக 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 10 பேர் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவிலும், 6 பேர் குழந்தைகள் நல அவசர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது. அனைவரும், மூளைவீக்க காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மூளைவரை காய்ச்சலின் தாக்கம் சென்றதாலுமே குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபி மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் இந்த மருத்துவமனைக்கு மூளைவீக்க நோய் சிகிச்சைக்காக ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.