Skip to main content

150 குழந்தைகள் இறந்த சம்பவம்... ஆஸ்படாஸ் சீட்டுகளை கொண்ட வீடுகளில் வசித்தவர்கள்... ஆய்வில் அதிர்ச்சி!!

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

அண்மையில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் என்செபாலிடிஸ் எனும் மூளை காய்ச்சல் காரணமாக பீகாரில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக இந்த வகை மூளை காய்ச்சல் ஏற்பட்டு பரிதாபமாக 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.

 150 children infection incident... People living in houses with asbestos slips...


இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பான காரணத்தை அறிய எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ ஆய்வு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இறந்த குழந்தைகளில் பெரும்பாலோனோர் ஆஸ்படாஸ் எனப்படும் சிமெண்ட் சீட்டுகளை மேற்கூரையாய் கொண்ட வீடுகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இரவில் கூட வெப்பத்தை வெளிவிடக்கூடிய தன்மை கொண்டவை இந்த ஆஸ்பெடாஸ் சீட்டுகள். அவற்றின் தொடர் வெப்பமும் இதற்கு காரணம் என அந்த குழு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மார்ச் மாதம் முதல் நீர்ச்சத்து குறையை நீக்க கொடுக்கப்படும் ஓ.ஆர்.எஸ் பவுடரும் சுகாதாரத்துறையால் வழங்கப்படவில்லை. மேலும் வளர்ச்சிதை மற்றக் கோளாறு, பலவீனம், வயதைவிட எடை குறைவு போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளும் இந்த சம்பவத்திற்கு காரணம்.

 

 150 children infection incident... People living in houses with asbestos slips...


நாள்தோறும் சராசரியாக 500 புறநோயாளிகள் வந்துசெல்லும் பீகார் முஷாபூர் மருத்துவமனையில் மொத்தம் 3 அல்லது 4 மருத்துவர்களே இருந்ததே குழந்தைகள் விரைவில் குணமாகாததற்கு காரணம் எனவும் அந்த ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

“அநீதி இழைக்கப்பட்டுள்ளது” - மத்திய அமைச்சர் அதிரடி ராஜினாமா! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Central Minister resigns in bihar

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் பசுபதி பராஸ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன்  கூட்டணி அமைத்து பீகார் மாநிலத்தில், உள்ள லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்டது. மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் அப்போது நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 39 இடங்களை வென்றது. இதில், பா.ஜ.க 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. மீதமுள்ள 1 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றதால், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் கடந்த 2020ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரர் பசுபதி குமார் பராஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, பசுபதி பராஸுக்கும், ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வானுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் காரணமாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனை தொடர்ந்து, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை பசுபதி பராஸும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) என்ற கட்சியை சிராஸ் பஸ்வானும் தொடங்கினர். 

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் சிராஜ் பஸ்வானுடன் கூட்டணி அமைப்பதாக பா.ஜ.க அறிவித்தது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தனது ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட பா.ஜ.க ஒதுக்கீடு செய்யப்படாததால் பசுபதி குமார் பராஸ் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

Central Minister resigns in bihar

இது குறித்து, பசுபதி குமார் பராஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பீகார் மக்களவைத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 40 வேட்பாளர்கள் பட்டியில் நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் எங்கள் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. நான் மிகுந்த நேர்மையுடன் உழைத்தேன். எங்களுக்கும், எங்கள் கட்சிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.