A wife who cut his tongue in a row over her husband

Advertisment

ஹரியானாமாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கரம்சந்த். இவரது மனைவி சரஸ்வதி. இருவருக்கும் சில தினங்களாக வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி தனது கணவரை பிரம்பால் தாக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து அவரது நாக்கை கத்தியால் அறுத்து காயப்படுத்தியுள்ளார். இதனால் அலறித்துடித்த கரம்சந்தின் சத்தம் கேட்டு தரைத்தளத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் ஓடிவந்தனர். அப்போது கரம்சந்த் நாக்கு அறுபட்டு ரத்தம் கொட்டிய நிலையில் கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே கரம்சந்தினை அங்கிருந்து மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சரஸ்வதி மேல் கரம்சந்தின் உறவினர்கள் ஹிசார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர்கள் சரஸ்வதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisment

இது குறித்து காவல்துறையினர் கூறும்பொழுது, “குடும்பத்தகறாரில் மனைவி தாக்கியதில் கணவர் கரம்சந்துக்கு தலையில்காயம் ஏற்பட்டது. மேலும் நாக்கில் மூன்றில் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. இதனால் படுகாயம் அடைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரம்சந்தின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சரஸ்வதி மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகள்வழக்கு பதிவு செய்யப்பட்டது” என்று கூறினர்.