Skip to main content

ஒரு ஜி.பியின் உண்மை மதிப்பு???

Published on 19/08/2017 | Edited on 19/08/2017



இந்நாட்களில் இணையம் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. நாம் வாசிக்கும் செய்தித்தாள்களிலிருந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு, திரைப்படங்கள் என நம்மை அடைகின்ற அனைத்துமே ஏதோ ஒரு வகையில் இணையத்தை சார்ந்ததாகவே செயல்படுகிறது. அதை யாராலும் மறுக்க  இயலாது. அதற்காக இணையம் இல்லையெனில் உலகம் நின்றுவிடும் என்பதல்ல, ஒவ்வொரு செய்தியையும் நாம் தெரிந்துகொள்ள நேரம் அதிகமாகும், அவ்வளவே. ஒரு ஜிபியின் (gb) பயன்பாட்டையும், மதிப்பையும் காண்போம் . 

ஒரு ஜிபி, அதாவது 1024 எம்.பி.(mb) இன்னும் ஆழமாகச்  சென்றால் 10,48,576 பைட் (byte) இதன்மூலம் நாம் 3000 இணைய பக்கங்களை பார்வையிட முடியும், 15,00,000 வாட்ஸ்-அப் (whats up) குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். (படம், வீடியோ இருப்பின் இதன் அளவு மாறுபடும்), 310 நிமிடம் யூ-டியூப்(youtube) வீடியோ பார்க்க முடியும் இது குவாலிட்டி (quality) அதிகரிக்கும்போது இதன் அளவு மாறுபடும். 4000 படங்களை (photos) பதிவேற்ற முடியும். 10,000 மெயில்களை அனுப்ப முடியும்.(படம், வீடியோ இருப்பின் இதன் அளவு மாறுபடும்). 10 மணிநேரத்திற்கான பாடல்களை கேட்க முடியும். இவை உதாரணங்களே.  




இந்த போட்டி நிறைந்த உலகத்தையும், முதலில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் அதைத்  தங்களுக்கேற்றவாறு பயன்படுத்தி  வெற்றி பெறுகின்றன. அதுசரி ஒரு ஜிபி இணையத்தின் மதிப்பைப்  (நாம் செலவிடும் தொகையல்ல, உண்மையான தொகையை) பார்ப்போம். இரண்டு முன்னணி நெட்வொர்க் (network) நிறுவனங்களின் டேட்டா பிளான்களை   (data plan)  அடிப்படையாக வைத்து ஒரு ஜிபி இணையத்தின் மதிப்பைக்  காண்போம். இரண்டு நிறுவனங்களின் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது ஒரு ஜிபி 178 மற்றும் 51 ரூபாய்களுக்கு கிடைக்கிறது. அப்படியே நாம் 10ஜிபி என பார்க்கும்போது அது 992 மற்றும் 301 ரூபாய்களுக்கு கிடைக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் 1ஜிபி முறையே 99.2 மற்றும் 30.1 ரூபாய்களுக்கு கிடைக்கிறது, அடுத்து நாம் உயர் மதிப்புக்கு சென்றால் ஒரு நிறுவனம் ரூ.1555க்கு 15ஜிபியும், மற்றொரு நிறுவனம் ரூ.509க்கு 56ஜிபியும் கொடுக்கிறது இதன்மூலம் ஒரு ஜிபியின் மதிப்பு ரூ.11.4 மற்றும் ரூ.9 ஆகும். சலுகையில் (offer) பார்க்கும்போது ஒரு நிறுவனம் ரூ.349க்கு 28ஜிபியும், மற்றொரு நிறுவனம் ரூ.399க்கு 84ஜிபியும் வழங்குகிறது. இதனடிப்படையில் முறையே ரூ.11.4 மற்றும் ரூ.4.75 ஆகும். 




பயன்படுத்தமாட்டோம் என்பதைவிட, பணமில்லை என்பதே குறைவான தொகைக்கு நாம்  ரீசார்ஜ் செய்யக்  காரணமாகும். பணமில்லாதவர்கள் தான்  அதிகமாக சேமிக்க வேண்டும். ஆனால் இங்கு அவர்கள் தான்  அதிகமாக செலவிடுகிறார்கள். இதற்கு காரணம், அந்த இன்றியமையாத்  தன்மையை உருவாக்கிக்கொண்டதுதான். இதையெல்லாம்விட ஒரு நிறுவனம் ஆறு மாதம் இணையத்தை  இலவசமாக அளித்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஒரு ஜிபியின் மதிப்பு என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த சிதம்பர ரகசியம் !!!

கமல் குமார் 

சார்ந்த செய்திகள்