Skip to main content

பெங்களூருவில் உளறிக் கொட்டிய மோடி!

Published on 05/02/2018 | Edited on 05/02/2018
பெங்களூருவில் உளறிக் கொட்டிய மோடி!



கர்நாடகாவில் 7 லட்சம் கிராமங்கள் இருப்பதாக மோடி கூறினார்.

எந்த பிரச்சனை என்றாலும் அதுபற்றி கருத்தே சொல்லாமல் வேறு பிரச்சனைகளை பற்றிப் பேசி திசைதிருப்புகிறர்களை கல்லுளி மங்கன் என்பார்கள்.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் சென்றுவிடுவார். செய்தியாளர்களைச் சந்திக்கமால் தவிர்ப்பார். நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கும்படி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் பேசமாட்டார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க மாட்டார்.

முதல் பாராவில் உள்ள விஷயத்தையும் அடுத்த பாராவில் இருக்கும் விஷயத்தையும் இணைத்துப் படித்தால் நான் பொறுப்பு அல்ல.

சரி விஷயத்துக்கு வருவோம். அடுத்த சில மாதங்களில் கர்நாடகா சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பதற்காக 85 நாட்கள் பிரச்சாரப் பயணத்தை பாஜக திட்டமிட்டுள்ளது. அதை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 4 ஆம் தேதி பெங்களூரு வந்தார்.



ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் மஹதாயி நதி நீர் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் உற்பத்தியாகி, கோவா வழியாக அரபிக் கடலில் கடக்கிறது இந்த நதி. இந்த நதியின் குறுக்காக ஆறு மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்தது. ஆனால், இந்த அணைத் திட்டத்திற்கு கோவா பாஜக அரசு தடை பெற்றுள்ளது.

இதையடுத்து பாஜகவுக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. பந்த்கூட நடைபெற்றது. இந்நிலையில்தான் பெங்களூரு வரும் மோடி, மஹதாயி பிரச்சனையில் சுமுகமான தீர்வு அறிவிக்க வேண்டும் என்றும், தவறினால்  மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தினர்.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே பக்கோடா விற்பதுகூட வேலை வாய்ப்புதானே என்று கூறி, படித்து வேலையில்லாத இளைஞர்களை கடுப்பேற்றி இருந்தார். அவர்களும் மோடி தனது கருத்தை வாபஸ் பெறவேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மோடி பெங்களூருக்கு வந்த நேரத்தில் கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அமைதிப்பூங்கா அருகே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மோடி பேசும் பொதுக்கூட்டம் நடைபெற்ற பகுதியில் வேலையில்லா பட்டதாரிகள் பலர், கருப்பு அங்கி அணிந்து, பக்கோடா ஏந்தி சாலையில் போகும் வாகன ஓட்டிகளுக்கு வினியோகம் செய்தனர்.



இதனிடையே, பிரதமர் மோடி, பணம் கொடுத்து அழைத்துவரப்பட்ட கூட்டத்தினர் மத்தியில் பாமரன்கூட பேசமுடியாத பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். இந்தியாவில் 2 லட்சம் கோடி வீடுகளுக்கு மின் இணைப்புத் தரப்போவதாகவும், கர்நாடகாவில் 7 லட்சம் கிராமங்கள் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் பேசியது அப்படியே தொலைக்காட்சிகளில் லைவாகவும் ஓடியிருக்கிறது.



இந்தியாவில் 2லட்சம் கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்போவதாக மோடி கூறியது தொலைக்காட்சியில் நேரலையாக ஓடியது.


கர்நாடகா முழுவதும் மோடியின் பேச்சைத்தான் சொல்லிச்சொல்லி சிரிப்பாய் சிரிக்கிறார்களாம்...

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்