Published on 27/02/2023 | Edited on 27/02/2023

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினாரான குஷ்பு தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பெண்களின் உரிமைக்காக போராடுவேன் என குஷ்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து குஷ்பூவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இது பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் குஷ்பூவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் பாராட்டியுள்ளார்.