உலகின் அதிக எடை கொண்ட பெண்மணி உயிரிழந்தார்!
உலகின் அதிக எடை கொண்ட பெண்மணி என உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்த, இமான் அகமது எனும் 37 வயது பெண் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் இமான் அகமது. இவர் 500 கிலோ எடையுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் எடைக்குறைப்பு சிகிச்சைக்காக மும்பை வந்த இவர், இங்கு நடந்த சிகிச்சையில் ஓரளவு எடையைக் குறைத்துக்கொண்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அபுதாபி சென்ற இவருக்கு, அங்குள்ள புர்ஜீல் மருத்துவமனையில் 20 மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் இதயக்கோளாறு மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக இமான் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.