பாகிஸ்தான் அரசின் சில சொத்துகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையின்றி விற்பதற்கு வழி செய்யும், அவசர சட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், வெளிநாட்டு கடன் சுமையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அரசின் சில சொத்துகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று நிதி நிலையைச் சீர் செய்யும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் மின்னுற்பத்தி நிலையம் உள்ளிட்ட சொத்துகளை விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் சொத்து விற்பனை திட்டத்திற்கு எதிரான வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்பது போன்ற அம்சங்களும் அவசர சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.