ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் 7.5 சதவீத ஊக்கத்தொகையானது தற்போது திடீரென்று 5 சதவீதமாக குறைக்கப்பட்டு சுமார் 2 முதல் 2.5 சதவீதம் வரை மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மத்திய அரசு, ஆயத்த ஆடைதொழிலை முன்னேற்றவும், இத்தொழிலையே நம்பியிருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலனையும் கவனத்தில் கொண்டு இந்த தொழிலுக்கு ஏற்கனவே வழங்கிய 7.5 சதவீத ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார்.