Skip to main content

சாலையோரம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த பெண்: தனியே தவித்த கைக்குழந்தை

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
சாலையோரம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த பெண்: தனியே தவித்த கைக்குழந்தை

திருப்பூர் அருகே செங்கப் பள்ளியில் கோவை, ஈரோடு புறவழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு பயணிகள் விடுதி அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கதக்க பெண் கழுத்தில் குரல்வளை அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அருகில் ஒன்றரை வருடம் வயதுள்ள ஆண் குழந்தை உள்ளது, இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை, இச்சம்பவம் இன்று காலை சுமார் 6.30 மணிக்கு நடைபெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது, மேலும் ஊத்துக் குளி காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

ஒன்றரை வயதுள்ள ஆண் குழந்தை திருப்பூர் பெரிச்சிபாளையம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது, இதனை ஊத்துக்குளி காவல்துறையினர் கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

சார்ந்த செய்திகள்