Skip to main content

வரி உயர்வை குறைக்க திமுக வினர் நூதன போராட்டம்

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

 

    விருத்தாசலத்தில் 33 வார்டுகள் அமைந்துள்ளன. இங்கு வியாபார நிறுவனங்கள் குடியிருப்புகள் விரிவுபடுத்தப்பட்ட மனைபகதிகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. இவைகளுக்கு தற்போது விருத்தாசலம் நகராட்சியின் மூலம் வரி உயர்வு செய்யப்பட்ட தகவல் குறித்து நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் குடியிருப்பு பகுதிகளில் சுமார் 150 மடங்கும் வியாபார பகுதிகளில் 200 மடங்கும் தொழிற்சாலை மற்றும் திருமணமன்டபங்களுக்கு சுமார் 300 மடங்கு வரி உயர்வு செய்து அதை உடனடியாக வசுலிக்க நகராட்சியால் கெடுபிடி செய்து வருகின்றனர். 

 

virudhachalam protest


இவைகளால் பொது மக்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சனைகள் சம்பந்தமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே மாநகராட்சிகள் நகராட்சிகள் ஊராட்சிகள் முழுவதும் அறிவிக்கப்படாத வரி உயர்வை கண்டித்து திமுக சார்பில் போராட்டங்கள் நடந்தது. 

விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து விருத்தாசலம் நகராட்சியின் மூலம் வரி குறைப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வரி மேல்முறையீட்டு குழுவும் செயல்படாமல் உள்ளதால் மக்கள் பல்வேறு மனவேதனைக்கு ஆளாகிவருகின்றனர்.

இதனால் நகர மக்களின் நலன்கருதி இந்த கடுமையான வரிகளை குறைக்க செய்யவும் வரி உயர்வினை சீராய்வு செய்திட நடவடிக்ககை எடுத்திட வேண்டியும் கோரிக்கை விடுத்து திமுக நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் திமுக நிர்வாகிகள் நகராட்சி ஆணையாளர் பாலுவை சந்தித்தது மனு கொடுக்க சென்றனர். 

ஆனால் திமுகவினரிடம் மனுவை பெற்றுக்கொள்ளாலமல் நகராட்சி ஆனையர் பாலு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த வேப்பமரத்திற்கு வேட்டி சட்டை அணிவித்து கோறிக்கையை நிறைவேற்ற மனுகொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் ராமு சிங்காரவேல் ரவிச்சந்திரன் அன்பழகன் மற்றும் திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்.கணேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தால் விருத்தாசலம் நகரரில் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்