Baby girl found in thorn bush with face mutilated - police investigating

கடலூரில் பிறந்த இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தை முகம் சிதைக்கப்பட்ட நிலையில் முப்பதில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி 30-வது வட்டம் பூஞ்சோதி நகரை ஒட்டியுள்ள புதர்கள் நிறைந்த பகுதியில் குழந்தை ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புகாரைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தையின் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்ததால் கொலை செய்யப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு குழந்தை வீசப்பட்டதா? அல்லது புதரில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் கடித்துக் குதறியதா? குழந்தையை வீசி சென்றது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெய்வேலி டவுன்ஷிப் பகுதி உள்ளிட்ட அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை முள் புதரில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.