Published on 04/08/2021 | Edited on 04/08/2021

திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள ஏகிரி மங்கலத்தைச் சேர்ந்த இளையராஜா, சாத்தனூரை சேர்ந்தவர் தர்மா என்ற தர்மராஜ் ஆகிய 2 பேரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில், இளையராஜா மனைவியிடம் அடிக்கடி பேசிவந்த தர்மராஜை இளையராஜா தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் விலக்கிவிட சென்ற இளையராஜாவின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த முகிலரசனை, தர்மராஜும் அவருடைய நண்பர்களும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து கொலையாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில் தர்மராஜ், சுந்தரம் பாக்யராஜ், அன்பு, சக்திவேல், குணா, வேலு, அண்ணாதுரை ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.