friend tied up and Young woman hit beach odisha

Advertisment

ஆண் நண்பரை கட்டிப்போட்டு, இளம்பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரும், அவருடைய ஆண் நண்பரும் கடந்த 15ஆம் தேதி கோபால்பூர் கடற்கரையின் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், இருவரது புகைப்படத்தையும் எடுத்ததாகவும் அதை இணையத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

அதன் பின்னர் அந்த ஆண் நண்பரின் கையை கட்டி போட்டி, அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு அந்த பெண்ணை இழுத்துச் சென்று கும்பலில் உள்ள 3 பேர் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருடைய நண்பரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கோபால்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்தை கண்காணித்து விசாரணை நடத்த தொடங்கினர்.

Advertisment

அந்த விசாரணையின்படிம் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 18 வயதை கடந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குற்றம் சாட்டபட்டவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.