Tragedy happens at the time when driver brake sudden

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது மேட்டுக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது உறவினர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் இறந்து போனார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள், சுப்பிரமணி, மணிகண்டன், சரோஜா, ரங்கநாதன், சுசீலா உட்பட அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 25 பேர் ஒரு மினி டெம்போ வை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அதில் ஏறி புறப்பட்டனர். ஏழுமலை என்பவர் டாட்டா ஏசி வேனை ஓட்டி சென்றுள்ளார்.

Advertisment

அந்த வேன் ஆம்பூர் என்ற ஊர் அருகே செல்லும்போது டெம்போவை கடந்து செல்ல முயன்றது ஒரு இருசக்கர வாகனம். அந்த வாகனத்தில் அதாண்டா மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டிச் செல்ல, பின்னிருக்கையில் அவரது மனைவி உமா அமர்ந்து சென்றுள்ளார். அப்போது மினி வேன் டிரைவர் அதிவேகமாக சென்று பைக்கில் மோதி விடாமல் இருக்க திடீர் பிரேக் போட்டுள்ளார். இதனால் மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மினி வேன் பைக்கில் சென்ற 25 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி ஆனந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதில் அண்ணாமலை மனைவி தேன்மொழி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். லட்சுமணன், சேகர், ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பத்மாவதி என்பவர் படுகாயங்களுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து காரணமாக கடலூர் -சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதுபோன்ற சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்று விபத்து ஏற்பட்டால் அதில் உயிரிழப்பவர்களுக்கு காயமடைந்தவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நஷ்ட ஈடு வழங்காது என்பது மோட்டார் வாகன சட்டத்தில் உள்ளது. இதை மோட்டார் வாகனம் ஓட்டுபவர்கள் அதன் உரிமையாளர்கள் அனைவருக்கும் தெரியும், அப்படி இருந்தும் சரக்கு வாகனங்களில் அப்பாவி மக்களை ஏற்றிச் சென்று அவர்கள் உயிரிழக்க காரணமாக இருக்கின்றனர்.