டெங்குவவை தொடர்ந்து பன்றி காய்ச்சல் -ஒருவர் பலி
.jpg)
கிருஷ்ணகிரி அடுத்துள்ள சின்னத்தாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் வயது 40., இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இருந்தார். தொடர் பரிசோதனையில் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறி தெரியவே... பெங்களுர் உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
ஆனால் முனிராஜிக்கு காய்ச்சல் குணமாகதால் கிருஷ்ணகிரி்யில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பார்த்து வந்தனா. ஆனால் சிகிச்சைப் பலன் இன்றி முன்ராஜ் இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 20 மேற்பட்ட நபர்கள் பலியாகி வந்த நிலையில் தற்போது பன்றி காய்சலுக்கு முனிராஜ் பாலியான தகவலும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் ஒருவர் பன்றி காய்ச்சலுடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை பீதி அடைய வைத்துள்ளது.
- எம்.வடிவேல்