Skip to main content

ரேஷன் கடையில் கையாடல் செய்த இரண்டு பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை!

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
ரேஷன் கடையில் கையாடல் செய்த இரண்டு பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டம், பொத்தனூர் அருகிலுள்ள தேவராயசமுத்திரம் வேளாண்மை சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலைக்கடையில் 1996 முதல் 1999 வரை, ரூ.4.45 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது, அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.

இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது விற்பனையாளராக பணிபுரிந்த இராஜலிங்கம், எழுத்தர் அன்பழகன், பொறுப்பு செயலாளர் கனகசபாபதி ஆகியோர் விற்பனை தொகையை, வங்கிக்கு முறையாக செலுத்தாமல் நிதியிழப்பு ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த வழக்கு பரமத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கு நடந்த நிலையிலேயே, கடந்த 2013-இல் இராஜலிங்கம் இறந்துவிட்டார்.

இந்நிலையில், நேற்று வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், பணத்தை கையாடல் செய்த அன்பழகன் மற்றும் கனகசபாபதி இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.6,000 அபராதம் விதித்து குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி தனபால் தீர்ப்பளித்தார்.

- பெ.சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்