Skip to main content

திருப்பாலைகுடி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி

Published on 26/09/2017 | Edited on 26/09/2017
திருப்பாலைகுடி அருகே லாரி கவிழ்ந்து 
ஒருவர் பலி இருவர் காயம்

திருவாடானை தாலுகா திருப்பாலைகுடி கிழக்கு கடற்கரை சாலையில் வளமாவூர் முனிஸ்வரன் கோவில் அருகே பரமக்குடியில் இருந்து செங்கல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் லாரியில் வந்த பரமக்குடி கங்ககொண்டாண் பகுதியைச் சேர்ந்த இராஜேந்திரன்(55) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், இதேபகுதியச் சேர்ந்த சாந்தி(47) ஆண்டி(48) இருவரும் காயமடைந்தனர். காயம் பட்டவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பரமகுடி, அரசரடிவண்டல் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல்(37) கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைகுடி காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் வட்டாண்வலசையை சேர்ந்த பாண்டி(30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

-பாலாஜி

சார்ந்த செய்திகள்